• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பால் விபத்து ஏற்படும் அபாயம்

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பால் விபத்து ஏற்படும் அபாயம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் பக்கவாட்டு அளவைக் குறைத்துவிடலாம் என்ற அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் சாலையின் அளவைக் குறைத்தால் விபத்துகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழி மற்றும் நான்கு வழி ஆகிய வழித்தடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சாலையின் இடதுபுறம் பழுதடைந்த வாகனங்கள், விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் ஓய்வு எடுக்கக் கூடிய வாகனங்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக 4 மீட்டர் இருக்க வேண்டும் என்று இந்தியன் ரோடு காங்கிரஸ் மேனுவல் விதிகளின்படி வழிமுறை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதை நெடுஞ்சாலைத்துறை மீறும் விதமாக 4 மீட்டர் கொடுக்கவேண்டிய இடைவெளியை 2.5 மீட்டர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் மூலம் பழுதடைந்த வாகனங்களை தற்காலிகமாக சாலையின் இடதுபுறம் நிறுத்தி வைத்தால் அதன் பின்னால் வரக்கூடிய வாகனங்கள் கவனக்குறைவாக மோதும் அபாய நிலை உள்ளது.

எதற்காக இந்த அறிவிப்பு என்ற விவரங்களைக் கேட்கும்பொழுது தற்பொழுது இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான தேசிய நெடுஞ்சாலை அமைக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் நிலம் கையகப்படுத்துவதில், சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Also read: தொடர்கதையாகிய குற்றச் சம்பவங்கள்: தாமாக முன்வந்து சிசிடிவி வைத்த பொதுமக்கள்

இதனால் நிலத்தைக் குறைப்பதால் வேகமாக சில வேலைகளை முடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆபத்து ஏற்படும் வகையில் இந்தப் புதிய டிசைன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் உடனடியாக இந்த அளவிடை பயன்படுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல புதிய சாலைகள் உடனடியாக அமைக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் விபத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் அவை அமையும் என வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: