#Newagriculturebill2020 | நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - விவசாயிகளின் கோபமும்,எதிர்ப்பும் ஏன்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

#Newagriculturebill2020 | நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - விவசாயிகளின் கோபமும்,எதிர்ப்பும் ஏன்?
வேளாந்துறை மசோதா
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 2:32 PM IST
  • Share this:
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு, ஏன் இவ்வளவு எதிர்ப்பு காட்டப்படுகிறது?முதலாவதாக நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதாவின் மூலம், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் மாநில அரசின் கீழ் பதியப்பட்ட மண்டிகளை தாண்டியும் தங்களது வேளாண் பொருட்களை விற்கவோ அல்லது வாங்கவோ முடியும். இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாநிலங்களில் செயல்பட்டு வரும் இடைத்தரகர்களின் நிலை என்னவாகும் எனவும் கேள்வி எழுந்துள்ளது. வேளாண் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை முடிவுக்கு வரும் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது

இரண்டாவதாக, நிறைவேற்றப்பட்ட விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதாவில், பெரும் வேளாண் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கார்ப்பரேட்களின் வருகையை ஊக்குவிக்கும் எனவும், சந்தையை கார்ப்பரேட்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தும் சூழல் ஏற்படும் எனவும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இறுதியில் ஒப்பந்தம் செய்த விளிம்பு நிலை விவசாயிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவர்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது


இறுதியாக நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதாவில், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.



மத்திய அரசின் இந்த முடிவால், பெரு விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

பஞ்சாப் முழுவதும் விவசாயிகளை பொருளாதார ரீதியாக ஒடுக்கி, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாக இந்த மசோதா மீது விமர்சனம் எழுந்துள்ளதுடன், போராட்டமும் வலுத்துள்ளது.இது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா?

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் விவசாயிகளின் உற்பத்தியைத் தேக்கி வைத்துக்கொண்டு தேவை அதிகரிப்பின்போது விலையேற்றம் செய்யும் அபாயம் இதில் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். மாநிலங்களுக்குள் சரக்கு குறித்து தகவல் தெரியாமல் போனால் உணவுப் பாதுகாப்புக்கு இழுக்கு வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விலை நிர்மாணத்தில் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் இருக்குமா?

விவசாயிகளுக்கு ஒப்பந்த வேளாண்மை என்னும் முறை முற்றிலும் புதியதாக இருக்கும். பண்ணத் தொழிலின் ஒருங்கமைக்கப்படாத இயல்பின் காரணமாக தனியார் நிறுவனங்களுடன் சட்ட ரீதியான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

 
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading