மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஆவதி என்ற பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய உளவுப்பிரிவு பயிற்சி மையம், இந்தோ திபெத் எல்லை படை பிரிவு அலுவலக கட்டடங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா இந்தியா -சீனா எல்லை விவகாரம் குறித்து முக்கிய கருத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்திய சீன எல்லை பகுதியான LAC பகுதியை இந்தோ திபெத் எல்லை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். மைனஸ் 42 டிகிரி குளரில் அவர்கள் செய்யும் பாதுகாப்பு பணியின் கடினத்தை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது. பலமான நம்பிக்கை மற்றும் உயரிய தேசபக்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
அருணாசலப் பிரதேசம், லடாக், ஜம்மு காஷ்மீர் போன்ற கடினமான பகுதிகளை பாதுகாக்கும் இந்தோ-திபெத் எல்லை படை வீரர்களை நாம் ஹிம்வீர் என்று அழைக்கிறோம். பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் போன்ற பட்டங்களை விட இந்த ஹிம்வீர் என்ற பட்டம் பெரியது. இது மக்கள் வழங்கிய பட்டமாகும்.எனவே, இந்தியா - சீனா எல்லை பகுதியை பற்றி ஒரு போதும் நான் கவலைபட்டதில்லை. காரணம் இந்தோ-திபெத் வீரர்கள் பாதுகாப்பில் இருக்கும் போது ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க முடியாது" என்று கூறினார்.
இந்திய சீன எல்லை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் லடாக்கில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வீரர்களை குவித்து வைத்துள்ளன.
இதையும் படிங்க: சபரிமலைக்கு வருகிறது விமான நிலையம்.. ஆணை பிறப்பித்த கேரளா!
இந்நிலையில் தான் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் எல்லை பகுதியில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சீனப் படைகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) அத்துமீறிச் செல்ல முயன்றதாகவும் , அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறினார். இருப்பினும் சீனா விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, India vs China, ITBP, Karnataka