கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு கொரோனா மரணத்திற்கும் ரூ. 50,000 இழப்பீடு வழங்குவதற்கான மையத்தின் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பணத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதாவது, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி கொரோனா நிவாரண நிதி பெறப்படுவதாக எழுந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க -
'என் மனைவி பெண் அல்ல' - விவாகரத்து கேட்டு உச்சநீதிமன்றத்தில் கணவர் வழக்கு
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது- கோவிட் இறப்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் போலி ஆவணங்களை பயன்படுத்தி கோவிட் நிதி தவறாக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
இதையும் படிங்க -
பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு
கொரோனா இழப்பீடு வழங்குவது என்பது ஓர் புனிதமான பணி. இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கையாளர் (CAG) விசாரணைக்கு உத்தரவிடப்படலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 21-ம்தேதி க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.