Home /News /national /

8 ஆண்டு ஆட்சியில் ஒருமுறை கூட தலைகுனிவு ஏற்படும் விதத்தில் செயல்பட்டதில்லை - பிரமதர் மோடி பேச்சு

8 ஆண்டு ஆட்சியில் ஒருமுறை கூட தலைகுனிவு ஏற்படும் விதத்தில் செயல்பட்டதில்லை - பிரமதர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அத்கோட் பகுதியில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த விழாவில் திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிரதமராக பொறுப்பேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில் நேர்மையான முறையில் நாட்டை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அன்னல் காந்தி, சர்தார் பட்டேல் கண்ட கனவு இந்தியாவை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம்.

    இந்த காலகட்டத்தில் நாட்டின் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது அவர்களின் வாழ்வை வளமாக்கியுள்ளது. நாட்டின் அனைத்து மக்களின் தேவைகளையும் உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்திலும் மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு பொருள்கள், தடுப்பூசி வழங்கப்பட்டன. இந்த எட்டு ஆண்டில் நாட்டின் சேவைக்கு இம்மி அளவும் குறையாமல் முயற்சி செய்து வருகிறேன். நாட்டு மக்களுக்கு தலைகுனிவு ஏற்படும் விதமான செயலில் ஈடுபட தனிப்பட்ட விதத்தில் நானோ, வேறு யாரையோ இதுவரை அனுமதித்ததில்லை" என பெருமிதத்துடன் கூறினார்.

    ரூ.50 கோடி மதிப்பில் 1.25 லட்சம் சதுர அடி சுற்றளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியின் 50 கிமீ சுற்றளவில் பன்னோக்கு மருத்துவமனை இதுவரை இல்லை. 35 மருத்துவர்கள், 200 செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றியுள்ளனர். இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

    இதையும் படிங்க: Exclusive: மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமையானவர்: சகோதரர் பேட்டி

    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். பிரதமர் மோடியின் இந்த எட்டு ஆண்டுகள் விழா கொண்டாட்டத்தை வரும் மே 30ஆம் தேதி வரை விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி