Home /News /national /

கொரோனாவுக்கு எதிரான சஞ்சீவனி விழிப்புணர்வு இயக்கம் - பிரசாரம் நிறைவு

கொரோனாவுக்கு எதிரான சஞ்சீவனி விழிப்புணர்வு இயக்கம் - பிரசாரம் நிறைவு

சஞ்சீவினி

சஞ்சீவினி

நியூஸ்18 குழுமத்தால் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சஞ்சீவனி விழிப்புணர்வு பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.

    நியூஸ்18 மற்றும் பெடரல் வங்கி சேர்ந்து 'சஞ்சீவினி - வாழ்க்கையின் ஒரு ஷாட்' தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை முன்னெடுத்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடங்கியது. இருப்பினும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கமும் அச்சமும் நிலவியது. அதனைப் போக்கும் விதமாக மக்களிடைய கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 9 மாதங்களாக சஞ்சீவினி தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமிருந்த 5 மாவட்டங்களில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெடரல் வங்கியின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்தத் திடம் செயல்படுத்தப்பட்டது.

    இதில், தன்னார்வலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அதில் பயன்படுத்தப்பட்டனர். 9 மாதங்களாக நடந்த சஞ்சீவினி விழிப்புணர்வு பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இந்த முடிவு விழாவில் பிரபலங்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.




    அதர் பூனவாலா, ஜார்ஜ் அலிகாரா, ஸ்டேன்லி ப்ளாட்கின், மருத்துவர் ரோட்ரிகோ, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், சச்சின் பைலட், நீரஜ் சோப்ரா, சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்த தெரிவித்த பூனவல்லா, ‘ஒமிக்ரான் வைரஸுக்கு தனி தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. நமக்கு தேவைப்பட்டால் பூஸ்டர் ஷாட் வழங்குவதை நாமும் தொடங்கலாம்’ என்று தெரிவித்தார்.

    சஞ்சீவினி முன்னெடுப்பு முடியும் தருவாயில் முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு சஞ்சீவினி குழு இரங்கல் தெரிவித்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Sanjeevani

    அடுத்த செய்தி