தினமும் 19 கோடி மக்களை சென்றடைந்த நெட்வொர்க் 18 குழும சேனல்கள்...!

தினமும் 19 கோடி மக்களை சென்றடைந்த நெட்வொர்க் 18 குழும சேனல்கள்...!
  • News18
  • Last Updated: April 2, 2020, 7:11 PM IST
  • Share this:
கொரோனா எச்சரிக்கையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தொலைக்காட்சி முன் தஞ்சமடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மற்றும் இணையதளம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் நிறுவனமான BARC சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நெட்வொர்க் 18 குழும சேனல்களை, தினமும் 19 கோடி மக்களை சென்றடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மார்ச் 21 முதல் 27 வரையில் 42 கோடி மக்கள் நெட்வொர்க் 18 குழும சேனல்களின் நிகழ்ச்சிகளை கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய செய்திக்குழுமம் என்ற இடத்தில் நெட்வொர்க் 18 தொடர்ந்து இருக்கிறது.


ஒட்டுமொத்தமாக டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது 1.2 ட்ரில்லியன் நிமிடத்தை அவர்கள் டிவி பார்க்க செலவிட்டுள்ளனர். இது இதுவரை இல்லாத புதிய சாதனை ஆகும்.

பிரதமர் மோடி அறிவித்த ஜனதா ஊரடங்கின் அன்று நெட்வொர்க் 18 குழும சேனல்களை 22.12 கோடி பேர் பார்த்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் நெட்வொர்க் 18 குழுமம் செய்திகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading