நெட்வொர்க் 18 - பெடரல் வங்கியின் சஞ்சீவனி கொரோனா பிரச்சார இயக்கம் தொடக்கம்!

சஞ்சீவனி பிரச்சாரம்

நெட்வொர்க் 18 - பெடரல் வங்கி இணைந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி பிரச்சார இயக்கம் இன்று தொடங்கியது

  • Share this:
கொரோனா தடுப்பூசி மீதான தவறான எண்ணங்களை போக்குவதுடன் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் ‘Sanjeevani – A Shot of Life’ என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ஒரு முன்மாதிரி முயற்சியாக அமைந்துள்ளது.

சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் சோனு சூட், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ராணுவ வீரர்கள் சல்யூட் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர் சோனு சூட் முன்மாதிரியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக நடந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களிடம் அமைதி காக்கும்படியும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டோம். தற்போது கொரோனாவுக்கு எதிராக நம்மிடையே தடுப்பூசி இருக்கும் போது கடந்த ஆண்டு யாரெல்லாம் நாங்கள் கூறியதை கவனித்தார்களோ அவர்களெல்லாம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என இப்போது கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.

சஞ்சீவனி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2 வது கொரோனா அலையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 5 கிராமங்களை தத்தெடுத்து, தங்கள் கிராமங்களில் இலவச தடுப்பூசிகளை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் Apollo 24/7 மருத்துவமனையின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இப்பணியில் அப்போலோவின் அனுபவமிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் மீதான மக்களின் அச்சத்தை போக்குவதுடன் மக்களை தடுப்பூசி போட முன்வர வைக்கவும் வழிவகை கிடைக்கும்.
Published by:Arun
First published: