சச்சின் டெண்டுல்கர் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து: சமூக வலைத்தளங்களில் கொந்தளித்த நெட்டிசன்கள்!

சச்சின் டெண்டுல்கர் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து: சமூக வலைத்தளங்களில் கொந்தளித்த நெட்டிசன்கள்!

சரத் பவாருடன் சச்சின்

சரத் பவார் மகாராஷ்டிர அரசில் அதிகாரத்தில் உள்ளார். ஆனால் பொது பிரச்சனைக்காக குரல் கொடுத்த தன் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே சரத் பவார் பகிரங்கமாக மிரட்டுகிறார் என தெரிவித்துள்ளார்.

  • Share this:
ரிஹானாவின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், பிற துறைகள் குறித்து கருத்து கூறுகையில் கவனமாக இருக்க வேண்டும் என்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் குமார் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சமீபத்தில் உலக கவனத்தை ஈர்த்தது. இதில் பெரும்பங்காற்றியவர் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு சச்சின், கோலி என விளையாட்டு நட்சத்திரங்கள் மட்டுமல்லாது கங்கனா ரனாவத், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நபர்கள் தலையிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இப்படி கருத்து தெரிவித்த பிரபலங்களில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை மட்டும் பலரும் சமூக வலைத்தளங்களில் வாட்டி வதைத்தனர். அவருக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த நிலையில் சச்சின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக தான் பேசினார் எனக் கூறி அவருக்கு ஆதரவாகவும் பலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “இந்திய நட்சத்திரங்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு பலரும் தங்களின் கருத்துக்களை தக்க முறையில் தெரிவித்துள்ளனர். பிற துறையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் (சச்சின் டெண்டுல்கர்) கவனமாக செயல்பட வேண்டும்!” என்று தெரிவித்தார்.



இருப்பினும் சச்சின் தொடர்பாக சரத் பவாரின் கருத்து சமூக வலைத்தளங்களில்
அவருக்கு எதிர்ப்பை பரிசாக அளித்திருக்கிறது. சரத் பவார், சச்சினை மிரட்டுகிறார் என அவர்கள் கூறியுள்ளனர்.

BlueKraft Digital Foundation என்ற அமைப்பின் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சரத் பவார் மகாராஷ்டிர அரசில் அதிகாரத்தில் உள்ளார். ஆனால் பொது பிரச்சனைக்காக குரல் கொடுத்த தன் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே அவர் பகிரங்கமாக மிரட்டுகிறார் என தெரிவித்துள்ளார்.



பகிரங்க மிரட்டல் விடுக்கிறார் சரத் பவார். இங்கு யார் ஃபாசிசவாதிகள் என கேள்வி கேட்டுள்ளார் மற்றொருவர்.



சரத் பவாரை ஆஸ்திரேலிய வீரர்கள் பரிசளிப்பு விழாவில் மேடையில் இருந்து ஒதுக்கித்தள்ளியதை ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.
Published by:Arun
First published: