ராமர் குறித்த பிரதமரின் கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை - நேபாள் அரசு விளக்கம்

ராமாயணம் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஷர்மா ஒலி பேச்சின் நோக்கம் என நேபாள வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது

ராமர் குறித்த பிரதமரின் கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை - நேபாள் அரசு விளக்கம்
நேபாள பிரதமர் சர்மா ஒலி
  • News18
  • Last Updated: July 14, 2020, 8:29 PM IST
  • Share this:
உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருப்பதாகவும் கடவுள் ராமர் இந்தியரே அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த கவிஞர் பானுபகத்தாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, கலாச்சார ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருப்பதாகவும், தங்களது நாட்டின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.

இந்திய இளவரசருக்கு நாம் சீதையை மணமுடித்துக் கொடுத்திருப்பதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், அயோத்தியை சேர்ந்த இளவரசனுக்கு தான் சீதையை கொடுத்ததோமே தவிர இந்தியாவுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். உண்மையான அயோத்தி என்பது நேபாளத்தின் தெற்கே உள்ள தோரி பகுதிதான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.


இந்த நிலையில், ராமர் குறித்த பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் கருத்துகளில், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, அயோத்தியின் பெருமையை குறைக்கும் நோக்கமோ கிடையாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்புபடிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
ராமர் குறித்தும் அவரோடு தொடர்புடைய பல்வேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்துள்ள நேபாள வெளியுறவுத்துறை, ராமாயணம் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஷர்மா ஒலி பேச்சின் நோக்கம் என்றும் கூறியுள்ளது
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading