நேபாளத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு
  • News18
  • Last Updated: May 27, 2019, 11:57 AM IST
  • Share this:
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுத்தடுத்து 3 இடங்களில் வெடி குண்டுதாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், 4 பேர் உயிரிழந்தனர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில், 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சிறிது நேர இடைவெளிக்கு பின் 3-வது இடத்தில் ஒரு குண்டு வெடித்ததில் 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் வெடிகுண்டை வேறு ஒரு இடத்தில் வெடிக்கச் செய்ய சென்றபோது தவறுதலாக குண்டு வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்களின் சதிவேலையாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.

Also see... இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...! என்ன நடக்கிறது?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading