முகப்பு /செய்தி /இந்தியா / நாகலாந்தின் முதல்வராக 5-முறையாக பதவியேற்றார் நெய்பியு ரியோ- மோடி, அமித்ஷா பங்கேற்பு

நாகலாந்தின் முதல்வராக 5-முறையாக பதவியேற்றார் நெய்பியு ரியோ- மோடி, அமித்ஷா பங்கேற்பு

நெய்பியு ரியோ

நெய்பியு ரியோ

நாகலாந்தின் முதல்வராக நெய்பியு ரியோ 5-வது முறையாக பதவியேற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagaland, India

நாகலாந்து மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் இல.கணேசன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்.,27 ல் தேர்தல் நடைபெற்றது. இன்று (மார்ச் 2 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.. 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தை காட்டிலும் அறுதிப்பெரும்பான்மைபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

அதனையடுத்து, என்.டி.பி.பி கட்சியை சேர்ந்த நெய்பியுரியோ 5 வது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதியானது.

இன்று நாகலாந்து மாநிலத் தலைநகர் கோஹிமாவில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாநில ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்களும் பதவியேற்றுகொண்டனர்.

First published: