• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது! அமித்ஷா குற்றச்சாட்டு

நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது! அமித்ஷா குற்றச்சாட்டு

அரசியல் சட்டப் பிரிவு 370-வது நீக்கத்தில் காங்கிரஸ் அரசியலைப் பார்க்கிறது. நாங்கள் அப்படிப் பார்க்கவில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்கவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நேரு தவறான நேரத்தில் பாகிஸ்தானுடனான யுத்தத்தை நிறுத்தியது தான், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இருப்பதற்கு காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர், ‘அரசியல் சட்டப் பிரிவு 370-வது நீக்கத்தில் காங்கிரஸ் அரசியலைப் பார்க்கிறது. நாங்கள் அப்படிப் பார்க்கவில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்கவில்லை. பாகிஸ்தானுடனான போரை தவறான நேரத்தில் நேரு நிறுத்தவில்லையென்றால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இருந்திருக்காது.

    காஷ்மீர் விவகாரத்தை நேருவுக்குப் பதிலாக சர்தார் வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ராகுல் காந்தியும், சரத் பவாரும் 370-வது சட்டப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: