முகப்பு /செய்தி /இந்தியா / மகளிர் தினம் : உடல் தோற்றம் குறித்த புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்த நீடா அம்பானி!

மகளிர் தினம் : உடல் தோற்றம் குறித்த புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்த நீடா அம்பானி!

நீடா அம்பானி

நீடா அம்பானி

பெண்களின் உடல் தோற்றம் குறித்து நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில், HER CIRCLE EVERY BODY என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ரிலையன்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி, உடல் தோற்றம் குறித்த புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று HER CIRCLE என்ற அமைப்பை நீடா அம்பானி தொடங்கினார். இதன் நீட்சியாக தற்போது பெண்களின் உடல் தோற்றம் குறித்து நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில், HER CIRCLE EVERY BODY என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

எத்தகைய உடல் அமைப்பு கொண்ட பெண்களும் அழகானவர்கள் தான் என்று கூறும் நீடா அம்பானி, திறமைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பில்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Mukesh ambani, Nita Ambani