ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து - முதல்வர் நாராயணசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து - முதல்வர் நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் 15 மையங்களில் 7,137 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் மூலக்குளம் க்ரைஸ்ட் கல்லூரி வளாகத்தில் 1,400 பேர் எழுதுகின்றனர்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. மாணவர்களை உள்ளே அனுப்பிவிட்டு பெற்றோர் கல்லூரி வாசலில் சமூக இடைவெளியின்றி  நின்றிருந்தனர்.

அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி, மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். ஒரு மாணவரின் பெற்றோர் இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என அச்சம்  தெரிவித்து அழுதார்.

Also read: நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தருமபுரி மாணவரின் உடலை வாங்க மறுப்பு- பெற்றோர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் தொடர்ந்து கூறிவந்ததாகவும் அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் பதிலளித்த நாராயணசாமி, கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என உறுதியளித்த என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரித்துள்ளனர். மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. தற்பொழுது மாணவர்களும் பெற்றோரும் அவதிப்படுவதை மத்திய அரசு நேரடியாகப் பார்க்கிறது. மத்தியில் காங்கிரஸ் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் ரத்து செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Published by:Rizwan
First published:

Tags: Narayana samy, Neet Exam