ஹோம் /நியூஸ் /இந்தியா /

அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?

அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?

முதுநிலை நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம்

முதுநிலை நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம்

நெக்ஸ்ட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் 2024-25ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டில் முதுநிலை நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் என்ற புதிய தேர்வு அறிமுகமாகவுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வானது இளநிலை எம்பிபிஎஸ் படிப்புகளைப் போலவே முதுநிலை படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்து அதற்கு பதிலாக நெக்ஸ்ட் என்ற புதிய தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. National Exit Test என்ற இந்த நெக்ஸ்ட் தேர்வு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

  டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்து நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. எனவே, அடுத்தாண்டு டிசம்பரில் நடைபெறும் நெக்ஸ்ட் தேர்வை 2019-20ஆம் ஆண்டு பேட்ச் மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் 2024-25ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

  எம்பிபிஎஸ் மாணவர்கள் மருத்துவ பணிகள் செய்வதற்கு லைசென்ஸ் பெறுதல், மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு செல்லுதல், வெளிநாடுகளில் மருத்துவ படித்தவர்கள் இந்தியாவில் பணிகள் மேற்கொள்வதற்கான தகுதி ஆகியவற்றுக்கு பொதுவாக இந்த தேர்வு இருக்கும்.

  இதையும் படிங்க: ஒரு ஆண்டில் மூடப்பட்ட 20ஆயிரம் பள்ளிகள்.. வேலையிழந்த 2.5 லட்சம் ஆசிரியர்கள் - அதிர்ச்சியில் கல்வித்துறை!

  இந்த நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ வாரியத்திற்கு பதிலாக எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Delhi, MBBS, Medicine, Neet Exam