ராகுல் காந்தி தொடங்கி வைத்த பரப்புரை.. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்..

ராகுல் காந்தி தொடங்கி வைத்த பரப்புரை.. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்..

ராகுல் காந்தி

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • Share this:
  மத்திய அரசின் தோல்வி காரணமாக நீட், ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யக் கூடாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  அவர் தொடங்கிவைத்த Speak Up For Student Safety என்ற ஹாஷ்டேக் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

  நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி சாஸ்திரி பவன் முன்பு கூடிய கட்சி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

  டெல்லி சாஸ்திரி பவன் முன்பு கூடிய காங்கிரஸ் தொண்டர்கள்.


  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  இதே போல தமிழகத்தில் சென்னை, திருச்செங்கோடு, திருநின்றவூர், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

  நீட் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை கைமீறி சென்றுவிட்டதால் தமிழக அரசால் எதுவும் செய்ய இயலாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நீட், ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களுக்காக தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Rizwan
  First published: