நீட் மசோதா நிராகரிப்பு - இரு அவைகளிலும் திமுக கடும் எதிர்ப்பு

நீட் மசோதா நிராகரிப்பு - இரு அவைகளிலும் திமுக கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றம்

நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் இன்று பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

  “தமிழகத்தின் மசோதாவை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

  இதனை அடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “சட்டமன்ற தீர்மானங்களை பரிசீலிப்பது குடியரசுத்தலைவரின் பணி. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாது” என்று பதிலளித்தார்.

  இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் திமுக இந்த பிரச்னையை எழுப்பியது. மக்களவையில் பேசிய டி.ஆர் பாலு, “நீட் மசோதாவை நிராகரித்தது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. 27 மாதங்கள் மசோதாவை நிலுவையில் வைத்திருந்து பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனைக் கூட வெளிப்படையாக மத்திய அரசு அறிவிக்கவில்லை” என்று பேசினார்.

  தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு எப்படி நிராகரிக்க முடியும்? என்று டி.ஆர் பாலு கேள்வி எழுப்பினார்.  இதனை அடுத்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கூச்சல், குழப்பத்தால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  மாநிலங்களவையிலும் திருச்சி சிவா இதே பிரச்னை தொடர்பாக பேசினார். பின்னர் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  Published by:Sankar
  First published: