நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் ஆலோசிக்க, டெல்லியில் அனைத்துக்கட்சி எம்பிகள் குழு முகாமிட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பிகள் குழு குடியரசுத்தலைவர் மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு பேருக்கு மேல் சந்திக்க குடியரசுத்தலைவர் மறுத்துவிட்டார்.
Also read: இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!
புதன், வியாழக்கிழமைகளில் அமித் ஷாவை இந்த குழு சந்திக்க முயற்சி செய்தது. எனினும் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூறி , அமித் ஷா தமிழக எம்.பி.களை சந்திப்பதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இயற்கைப்பேரிடர் நிவாரணமாக 3,063 கோடி ரூபாய் நிதியை அண்மையில் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் கடந்த மாதம் தமிழகத்தில் கொட்டிய கனமழைக்கு இதுவரை எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழக வெள்ள பாதிப்புக்கு 6,229 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், எந்த நிவாரணத்தொகையும் அளிக்கப்படவில்லை.
இதேபோல் டெல்லியில் நடந்த நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பில் மாநில அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், வரிவிதிப்பு முறையில் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புகார்களை மறுத்துள்ள பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அரசியல் காரணங்களுக்காக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் அமித் ஷாவை சந்திக்க முயற்சிப்பதாக கூறினார்.
தமிழக அனைத்துக்கட்சி எம்.பிகள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அமித்ஷா நேரம் ஒதுக்குவாரா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க :
டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்புஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.