நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்

கோப்புப்படம்

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்றும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
செப்.13-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை, "ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது. தரவுகளின் அடிப்படையில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மற்ற பிற நாடுகளில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு நாடுகளிலும் தேர்வு மையங்களை அமைக்க முடியாது" என்றும் கூறியுள்ளது.

Also read... பஞ்சாப்பில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் தொடக்கம்..

மேலும், வந்தே பாரத் திட்டன் கீழ் போதிய விமானங்களை இயக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் என்டிஏ பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: