திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம்

திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்களை 3வது முறையாக உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  நாடு முழுக்க வரும்13-ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை தள்ளி வைக்கக் கோரி கேசவ் மகேஸ்வரி, அர்ஜித் சாவ் மற்றும் 20 மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே கடந்த 17ம் தேதி இதே கோரிக்கையுடன் வந்த மனுக்களை அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

  16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், குறைந்த அளவிலான தேர்வு மையங்கள் இருப்பதால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  மேலும் படிக்க...தாமதமாகிறதா கோவிஷீல்டு சோதனைகள்?

  இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளது. இதற்கு முன் 6 மாநில அரசுகள் தொடர்ந்த மறு ஆய்வு மனுக்களையும் கடந்த 5ம் தேதி நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: