• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால், நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள்.

    தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக நிறைய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவங்களும் நடைபெற்றன. இந்தநிலையில், இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தநிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: