நீட் தேர்வு கட்டாயமே.. பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - உச்சநீதிமன்றம்

வேலூர் சி.எம்.சி. கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு கட்டாயமே.. பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - உச்சநீதிமன்றம்
தேர்வெழுதும் மாணவர்கள்
  • News18
  • Last Updated: January 28, 2020, 8:12 AM IST
  • Share this:
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமே எனவும், இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வாய்ப்பே இல்லை எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரி வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு மருத்துவக்கல்லூரியில் வாய்ப்பளித்து வருவதால் தங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வு கட்டாயம் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியது.


நாடு முழுவதும் நீட் தேர்வு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் விலக்களிக்க முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். இதை அடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்