Home /News /national /

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்த விவகாரம்.. 5 பேர் கைது!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்த விவகாரம்.. 5 பேர் கைது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

NEET exam frisking | கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    கேரளாவில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.

    இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர். தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்தித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது மகளை போல் பிற மாணவிகளையும் உள்ளாடையை கழற்ற சொல்லி நிர்பந்தித்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. மைய கண்காணிப்பாளர் மற்றும் சுயாதீன பார்வையாளர் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர், கொல்லம் மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவில்லை என கூறியுள்ளனர்.

    தேர்வர் தேர்வும் எழுதியுள்ளார் என தேசிய தேர்வு மையம் கூறியது. தேர்வின்போதே அல்லது தேர்வு முடிந்த பின்னரோ இது தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் மேலும் இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும்/புகாரையும் என்டிஏ பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Kerala, Neet, Neet Exam

    அடுத்த செய்தி