NEET Exam : ‘நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ - ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதில்

நீட் - நாடாளுமன்றம்

முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். மேலும் முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும்.

  • Share this:
    கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., “கொரோனா பெருந்தொற்று, குறிப்பாக அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்ய ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதன் காரணங்களைத் தருக.

    ஒருவேளை நீட் நுழைவுத் தேர்வை நடத்துவது என அரசு தீர்மானித்தால், அடுத்து வரும் மாதங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு உருவாக்கி இருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வைப் போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தருக. என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    எம்.பி ரவிக்குமார்


    அதற்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், “நீட் தேர்வு ரத்து செய்யப்படாது .NEET- (PG) & NEET- (UG) 2021 தேர்வுகள் முறையே 11 செப்டம்பர், 2021 மற்றும் 12 செப்டம்பர், 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

    கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கென தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுக்குப் பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

    1) - தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2) - தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் அவர்கள் சுலபமாக நடமாடுவதற்கான இ-பாஸைக் கொண்டிருக்கும்.

    3) - தேர்வு மையங்களுக்குள் நுழைவது வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்.

    4) - அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலையை சோதிக்கப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் கண்டறியப்பட்டவர்கள், இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தனி தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

    Must Read : மாநிலங்களவையில் அமைச்சரின் கையிலிருந்து அறிக்கையை பிடுக்கி கிழிப்பு - திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்

    5) - முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். மேலும் முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும்.

    6) - தேர்வு மையத்திற்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் / மாநில அரசுகளே நடத்துகின்றன.” இவ்வாறு அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினாவை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி யும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: