வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் (NEET and JEE Exams 2021) குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷக் (Education Minister Ramesh Pokhriyal Nishak) வியாழக்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடினார்.
இது அமைச்சரின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2021 இன் தேதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் (Dates and Syllabus of NEET and JEE Exams 2021) தொடர்பாக மாணவர்களின் பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் 2021 குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உரையாற்றிய சிறப்பம்சங்களை இங்கே காண்போம்:
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் 2021 (NEET and JEE Exams 2021) பற்றிய திட்டமிடலில் எவ்வித காலதாமதமும் இன்றி திட்டமிட்ட முறையில் தேர்வை நடத்த மத்திய அரசு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது, இதனால் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இனி கவலை கொள்ளத்தேவையில்லை என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் சிரமங்கள் ஒருபுறம் இருந்தாலும் போட்டித் தேர்வுகள், ரத்து செய்யப்படாமல் மாணவர்களின் வாழ்க்கை நலன் கருதி இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டதாகக் அமைச்சர் கூறினார். மேலும், தேர்வுகளை ரத்து செய்திருந்தால் மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகி இருக்கும். மேலும் மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள எந்தவொரு அரசும் செய்யும் செயலைத்தான் மத்திய அரசும் செய்துள்ளது என்றார் அவர்.
மேலும், தேர்வுகள் முன்னேற்றத்தின் படிக்கட்டுகள் அதை நடத்தியே ஆக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார். அரசாங்கத்தின் முடிவை மாணவர்கள் வரவேற்றுள்ளதாகவும், எனவே, அந்த தேர்வுகள் வரும் ஆண்டில் நிச்சயமாக அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் 2021 (NEET and JEE Exams 2021) ஒத்திவைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போக்ரியால், மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை விரைவில் அறிவிக்க அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பார்கள் என்று கூறினார்.
நீட் மற்றும் ஜே.இ.இ (NEET and JEE Exams 2021) தேர்வு தேதிகளை இறுதி செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். வரவிருக்கும் NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து பல மாணவர்களும் ஆசிரியர்களும் வினவினர், இதற்கு மத்திய கல்வி அமைச்சர், கேள்வித்தாளின் வடிவம் மற்றும் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தை பற்றி விரைவில் அதிகாரிகள் குழு நல்ல முடிவை எடுக்கும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.
போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை 10 முதல் 20 சதவீதம் வரை குறைக்க மாணவர்கள் அளித்த பரிந்துரைகளை போக்ரியால் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு ஆணையம் (National Testing Authority (NTA)), போட்டித் தேர்வுகள் தொடர்பான தேர்வு தேதிகள் மற்றும் பிற முக்கிய விவரங்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet Exam