முதன் முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது; மத்திய அமைச்சர் அறிவிப்பு

கோப்புப் படம்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்காக, குவைத்தில், ஒரு நீட் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, 13 மொழிகளில் நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்

    நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எனினும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நீதி தேர்வு நடத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடப்பு ஆண்டில் கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தன. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மேலும், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தேர்வு தள்ளிப்போக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    Also read: மலைப் பகுதிகள், சந்தைகளில் முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூடுவது கவலைக்குரியது - பிரதமர் மோடி வருத்தம்

    இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலை 5 மணி முதல், நீட் தேர்வு விண்ணப்பிக்கும் முறை ntaneet.nic.in ஆன்லைனில் தொடங்கியது.

    இந்நிலையில், முதன் முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்காக, குவைத்தில், ஒரு நீட் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் நீட் தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, குஜராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, முதன்முறையாக, 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: