• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடிக்கு அளிக்கப்ட்ட பரிசுப் பொருட்களில் அதிக தொகைக்கு ஏலம் போனது இதுதான்

பிரதமர் மோடிக்கு அளிக்கப்ட்ட பரிசுப் பொருட்களில் அதிக தொகைக்கு ஏலம் போனது இதுதான்

பிரதமர் மோடிக்கு அளிக்கப்ட்ட பரிசுப் பொருட்கள்

பிரதமர் மோடிக்கு அளிக்கப்ட்ட பரிசுப் பொருட்கள்

டோக்யோ ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை பவானி தேவி பயன்படுத்திய வாள் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

  • Share this:
    பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலமிடப்பட்டதில், டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீர்ஜ் சோப்ராவின் ஈட்டி அதிகபட்சமாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பிரதமர் மோடிக்கு கிடைத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் pmmementos.gov.in. என்ற இணையதளத்தில் ஆன்லைனில் ஏலமிடப்பட்டன. கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கிய இந்த ஏலம், வியாழக்கிழமையுடன் முடிந்தது. அதில் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர், நீரஜ் சோப்ராவின் ஈட்டி அதிகபட்சமாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டோக்யோ ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை பவானி தேவி பயன்படுத்திய வாள் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

    இதேபோல் சுமித் அண்டிலின் ஈட்டி 1 கோடியே 2 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலமெடுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்திஸ் விற்றுத் தீர்ந்ததாக கூறியுள்ள கலாசார அமைச்சகம், இதர ஆயிரத்து 348 பொருட்கள் ஏலம் போகவில்லை என்று கூறியுள்ளது.

    Also Read : எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறல்: இந்திய படையினருடன் கைகலப்பு

    இந்த மின்னணு ஏலத்தில் 8 ஆயிரத்து 600 முறை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சர்தார் படேல் சிற்பங்களை 140 பேர் வாங்க ஆர்வம் காட்டினர். மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை 117 பேர் ஏலம் கேட்டதாகவும் புனே மெட்ரோ ரயிலின் மாதிரியை 104 பேர் வாங்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதியை தூய்மைபடுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: