ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில் ஜன்னலுக்குள் புகுந்து கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி - பயணி பரிதாப மரணம்

ரயில் ஜன்னலுக்குள் புகுந்து கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி - பயணி பரிதாப மரணம்

ரயில் பயணி கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி

ரயில் பயணி கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி

டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் இடையே செல்லும் நீலான்சல் எக்ஸ்பிரெஸ் ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ரயில்வே டிராக் வேலைக்காக வைத்திருந்த கம்பி எதிர்பாராத விதமாக குத்தியதில் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த ரயில் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் இடையே செல்லும் நீலான்சல் எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஹரிகேஷ் குமார் துபே என்ற நபர் பயணித்துள்ளார்.

இந்த ரயில் இன்று காலை 8.30 மணி அளவில் உத்தரப் பிரதேசத்தின் தன்வார் மற்றும் சோம்வார் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடியுள்ளது. பயணி ஹரிகேஷ் குமார் தூபே ஜன்னல் ஓரே சீட்டில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென்று ஜன்னல் வழியாக இரும்பு கம்பி உடைத்து புகுந்து ஹரிகேஷ் கழுத்தில் பாய்ந்துள்ளது. இந்த திடீர் விபத்து காரணமாக ரத்த வெள்ளத்தில் மூழ்கி ஹரிகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்த சக பயணிகள் அலறி அடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ரயில் தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அதற்காக அங்கு இரும்பு கம்பிகள் நட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒன்று தான் ரயில் ஜன்னல் வழியாக புகுந்து ஹரிகேஷ் உயிரை பறித்துச் சென்றுள்ளது. பின்னர் ரயில் அலிகர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே காவலர்கள் ஹரிகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Accident, Delhi, Indian Railways, Passengers, Railway