• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • "செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்

"செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்

மாதிரி படம்

மாதிரி படம்

தவிர்க்க முடியாத காரணங்களுடனும், சில மூடத்தனமான காரணங்களுடனும் இ-பாஸ் கோரிக்கைகள் காவல்துறைக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேவையற்ற காரணங்களை கொடுக்கும் மக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • Share this:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பை குறைக்க இந்திய அரசாங்கம் போராடி வரும் நிலையில், பல மாநிலங்கள் நிலைமையைச் சமாளிப்பதற்கும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

சமூக விலகல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது ஆகியவை தற்போதைய காலத்திற்கு கட்டாய தேவையாகிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் அனாவசியமாக மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டத்தையும், பயணத்தையும் தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அனாவசியமாக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல மாநிலத்திற்குள் பயணங்களுக்கு தடை அறிவித்த மாநிலங்களில் அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பாஸ் பெறுமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத காரணங்களுடனும், சில மூடத்தனமான காரணங்களுடனும் இ-பாஸ் கோரிக்கைகள் காவல்துறைக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேவையற்ற காரணங்களை கொடுக்கும் மக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுபோன்று சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், வெளியே செல்ல விரும்பிய ஒருவரிடமிருந்து வினோதமான இ-பாஸ் கோரிக்கையை கேரள காவல்துறையினர் பெற்றனர். கண்ணூரின் கண்ணபுரத்தில் உள்ள இரினாவே எனும் பகுதியில் வசிப்பவர் தனது இ-பாஸ் விண்ணப்பத்தில் ‘செக்ஸ்’-க்காக வெளியே செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். மாலையில் நேரத்தில் தனது வீட்டில் இருந்து கண்ணூரில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல அந்த நபர் விரும்பியுள்ளார்.

இந்த விண்ணப்பம் போலீசாரின் கவனத்திற்கு சென்றதும் அப்பகுதி உதவி போலீஸ் கமிஷனர் அந்த நபருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதையடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நபரை கைது செய்ய வலப்பட்டணம் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கேரள கவுமுடி பத்திரிகையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின் தான் செய்ததை தவறு என்று உணர்ந்த அந்த நபர் போலீசாரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தனது இ-பாஸ் கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்பு எழுத்துப்பிழையை ஒழுங்காக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். விண்ணப்பத்தில் ‘சிக்ஸ் ஓ கிளாக்’ என்று எழுத விரும்பியதாகவும் அது தவறாக ‘செக்ஸ்’ என்றும் எழுதப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட போலீசார், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று எச்சரித்து அந்த நபரை விடுவித்துள்ளனர்.

முன்னதாக இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்ட மாஜிஸ்திரேட் ராகுல் குமார் தனது சமூகவலைதள பக்கத்தில் பீகார் காவல்துறையினரால் பெறப்பட்ட இ-பாஸிற்கான மற்றொரு வினோதமான விண்ணப்பத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த விண்ணப்பதாரர் தனது முகப்பருக்கள் மற்றும் பருக்களுக்கு சிகிச்சை பெற பயணம் செய்ய வேண்டும். எனவே உடனடியாக தனக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க எளிய வழி: மதுரை மருத்துவர் சொல்லும் தொழில்நுட்பம் என்ன?

அந்த இ-பாஸை பதிவிட்ட அவர் குறிப்பிட்டிருந்தாவது, “ ஊரடங்கின் போது இ-பாஸ் வழங்குவதற்காக நாங்கள் பெறும் அதிகப்பட்ச விண்ணப்பங்கள் உண்மையானவை. ஆனால் இந்த வகையான கோரிக்கைகளையும் நாங்கள் பெறுகிறோம். சகோதரரே, உங்கள் பருக்கள் சிகிச்சைக்கு காத்திருங்கள். #Priorities. " என்று கேப்ஷன் செய்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை செயல்படுத்த பாடுபட்டு வரும் நிலையில், இதுபோன்ற முக்கியத்துவம் அற்ற விஷயங்களுக்காக இ-பாஸ் கேட்கும் போது காவல்துறை கடும் அழுத்தத்திற்கு உள்ளாவதாக தங்கள் விரக்தியை தெரிவித்து வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: