• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் - மம்தா பானர்ஜி அழைப்பு

பாஜகவை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் - மம்தா பானர்ஜி அழைப்பு

சோனியா காந்தி - மம்தா பானர்ஜி

சோனியா காந்தி - மம்தா பானர்ஜி

பாஜக-வை வீழ்த்துவதற்காக தனியாக தன்னால் எதுவும் செய்ய முடியாது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றார்.

  • Share this:
    பாஜக-வை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

    டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கமல்நாத் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, தங்களது சந்திப்பு சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அரசியல் சூழல் குறித்தும், பெகாசஸ், கொரோனா நிலவரம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

    Also Read : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி

    எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் வரும் என்று கருதுவதாக அவர் கூறினார். பாஜக-வை வீழ்த்துவதற்காக தனியாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

    Also Read : வங்கிகளில் டெபாசிட்களுக்கு காப்பீட்டுத் தொகை - புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எதிர்க்கட்சிகளுக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்விக்கு, நான் ஜோசியக்காரர் இல்லை என்ற மம்தா பானர்ஜி, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பல கட்சிகளுடன் முறைப்படி பேச்சுவார்த்தை நடக்கும் என கூறினார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் மம்தா பானர்ஜியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: