வேளாண் சாகுபடிக்கு தேவையான தொழில்நுட்ப புரட்சி ஏற்பட வேண்டும் - பிரதமர் மோடி

வேளாண் சாகுபடிக்கு தேவையான தொழில்நுட்ப புரட்சி ஏற்பட வேண்டும் - பிரதமர் மோடி
  • Share this:
வேளாண் சாகுபடிக்குத் தேவையான தொழில்நுட்பப் புரட்சி நாட்டில் ஏற்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் 107வது அகில இந்திய. அறிவியல் மாநாட்டை துவங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்த புத்தாண்டின் துவக்கத்தில் தான் பங்கேற்கும் கூட்டங்களில் அறிவியல் மற்றும் புதுமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய மோடி, 2020ம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கூடிய வளர்ச்சியுடன் தொடங்கும்போது நம் கனவுகளை நோக்கி அடுத்த எட்டை எடுத்து வைப்பது போலாகும் என்றார்.

புதுமை குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 52 ஆக உ.யர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய பிரதமர், அரசின் சீரிய திட்டங்களால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் வேகமாக முன்னேறியிருப்பதாகவும் மோடி கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், வேளாண் சாகுபடிக்குத் தேவையான தொழில்நுட்பப் புரட்சி ஏற்படவேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி.. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பயிர்களை விவசாயிகள் எரிப்பதால் உண்டாகும் பிரச்னைகளுக்கு விஞ்ஞானப்பூர்வமாக தீர்வு காணப்படவேண்டும் என்றும் செங்கல் சூளைகளில் குறைந்த அளவு புகை வெளியாகும் வகையிலான தொழில்நுட்பங்கள் கண்டறியப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்