இரண்டரை மணிநேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு: தமிழகத்துக்கு ரயில்கள் இல்லை..!

புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டரை மணிநேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு: தமிழகத்துக்கு ரயில்கள் இல்லை..!
ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
ஜூன் 1-ஆம் தேதி முதல் துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா எக்ஸ்பிரஸ் போன்ற 200 முக்கிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.  இதற்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது ரயில்வே துறை.

ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து தெரிவித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள ரயில் சேவையில் முதல் 73 ரயில்களுக்கு மட்டும் சுமார் 1.49 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இவற்றில் பயணம் செய்ய 2,90,510 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று காலை முன்பதிவு தொடங்கி இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன எனத் தெரிவித்தார்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.


ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத 2-ஆம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார். அதன்படி, ஏசி வசதி அல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களுக்கான அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது ரயில்வே துறை. அதில் தமிழகத்துக்கு இயக்கப்படும் எந்த ரயில் சேவையும் தெரிவிக்கப்படவில்லை.
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading