ஹோம் /நியூஸ் /இந்தியா /

'ஆஃபிஸ் வந்து சேருங்க'.. முடிவுக்கு வரும் வொர்க் ப்ரம் ஹோம்... பறக்கும் உத்தரவுகள்.. காரணம் இதுதான்!

'ஆஃபிஸ் வந்து சேருங்க'.. முடிவுக்கு வரும் வொர்க் ப்ரம் ஹோம்... பறக்கும் உத்தரவுகள்.. காரணம் இதுதான்!

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

இந்தியாவில் சுமார் 46 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக அலுவலகத்தில் இருந்து தான் பணிபுரிய வேண்டும் என்று முடிவை எடுத்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  2020ஆம் ஆண்டில் உலகையே கோவிட் பெருந்தொற்று முடக்கிப்போட்ட நிலையில், வொர்க் ஃபரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் மாடலை பெரும்பாலான நிறுவனங்கள் உருவாக்கின. கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் தொடங்கி சாத்தியம் கொண்ட பெரும்பாலான துறைகளில் இந்த வொர்க் ப்ரம் ஹோம் மாடல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.

  2022ஆம் ஆண்டு கோவிட் தொற்று தாக்கம் சரிந்து இயல்பு நிலைத் திரும்பிய நிலையில், முன்னணி நிறுவனங்களும் மெல்ல தங்கள் ஊழியர்களை அலுவலகம் வர அழைக்கத் தொடங்கின. பரிசோதனை முயற்சியில் வாரத்திற்கு சில நாள்கள் அலுவலகம் சில நாள்கள் வீட்டில் இருந்து வேலை என்ற ஹைப்ரிட் மாடலை கடைப்பிடிக்கத் தொடங்கிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக மீண்டும் முழு வீச்சில் வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறைக்கு முடிவு கட்டத் தொடங்கியுள்ளன.பல ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு பழகிப்போனாலும் நிறுவனங்கள் அலுவலத்திற்கு திரும்புமாறு கறார் உத்தரவை பிறப்பித்துள்ளன.

  இந்தியாவிலும் இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரவழைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக Randstad என்ற அமைப்பு செய்த ஆய்வில், இந்தியாவில் சுமார் 46 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக அலுவலகத்தில் இருந்து தான் பணிபுரிய வேண்டும் என்று முடிவை எடுத்துள்ளன. மேலும், 32 சதவீத நிறுவனங்கள் ஹைப்ரிட் வொர்க் மாடலை கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளன. வெறும் 16 சதவீத நிறுவனங்கள் மட்டும் தான் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை கொடுக்க முன்வந்துள்ளன.

  துறை வாரியாக பார்க்கையில் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் முற்றாக வொர்க் மாடலை நிறுத்தியுள்ளன. தொடர்ந்து BFSI துறையில் 68 சதவீத ஊழியர்களும், ரீடெயில் துறையில் 57 சதவீத ஊழியர்களும் அலுவலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். ஐடி துறையில் 53 சதவீதமும் பிபிஓ துறையில் 45 சதவீத ஊழியர்களும் ஹைப்ரிட் மாடலில் இயங்கி வருகின்றன. வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களில் பாலின ரீதியாக பார்க்கையில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகின்றது. வீட்டில் இருந்து வேலை செய்யவே பெண்கள் விரும்பும் நிலையில், நிறுவனங்களும் ஆண்களை விட பெண்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் மாடலை கூடுதல் முன்னுரிமையுடன் தருகின்றன.

  இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஆர்வம் குறைகிறதா.... தரவுகள் சொல்வது என்ன?

  கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் தற்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதில் சிக்கிக்கொள்ள கூடாது என்ற முனைப்பில் நிறுவனங்கள் ஊழியர்களின் முழு வேலைத்திறனை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. இதற்கு அவர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதே உகந்த வழி என்ற நோக்கில் இந்தியாவிலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வொர்க் ப்ரம் ஹோம் மாடல்கள் மூடுவிழா கண்டுள்ளன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Work From Home