Home /News /national /

கேரளாவில் பள்ளிகள் திறப்புக்கு பின் 2 பள்ளிகளை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், 72 ஆசிரியர்களுக்கு கொரோனா!

கேரளாவில் பள்ளிகள் திறப்புக்கு பின் 2 பள்ளிகளை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், 72 ஆசிரியர்களுக்கு கொரோனா!

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன கேரள பள்ளிகள்!

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன கேரள பள்ளிகள்!

பிப்ரவரி 1ம் தேதியன்று 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு பயிலும் 582 மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் மலப்புரத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் பயிலும் சுமார் 200 மாணவர்களுக்கும், 72 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்படத்தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலம் என பாராட்டப்பட்டது கேரளா. இதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்ததும் நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில் தற்போது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மகாராஷ்டிர மாநிலத்தில் கூட தற்போது 1,000 என்ற அளவில் தான் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா தற்போது நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யும் மாநிலமாக மாறியிருக்கிறது.

அங்கு தினந்தோறும் 6,000 என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த சூழலில் ஜனவரி முதல் வாரத்திலேயே அங்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மாரஞ்சேரி மற்றும் வன்னேரி அரசு பள்ளி மாணவர்கள் 187 பேருக்கும், 72 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இவ்விரு பள்ளிகளும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பது தெரியவந்தது. இதை மாவட்ட மருத்துவ அதிகாரி சகீனாவும் உறுதி செய்துள்ளார்.

பிப்ரவரி 1ம் தேதியன்று 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு பயிலும் 582 மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேல்நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

 

 
Published by:Arun
First published:

Tags: Corona, Kerala, School Reopen

அடுத்த செய்தி