Home /News /national /

1,000 போலீசாருக்கு கொரோனா - டெல்லி காவல்துறை அதிர்ச்சி தகவல்

1,000 போலீசாருக்கு கொரோனா - டெல்லி காவல்துறை அதிர்ச்சி தகவல்

Delhi Police

Delhi Police

டெல்லி கூடுதல் கமிஷனர் சின்மோய் பிஸ்வால், காவல்துறை செய்தித்தொடர்பாளர், போலீசார் என 1,000 பேர் ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 1,000 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதன் காரணமாக மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் மிக விரைவாகவே பல்வேறு நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் காரணமாக ஆயிரங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது லட்சங்களாக பதிவாகி வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர், ஊடகவியலாளார்கள், தொழிலதிபர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் என தினசரி அளவில் பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Alos read:  ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

    இதே போல கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் மாணவர்கள், பணியாளர்கள் என கொத்துக் கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நாடாளுமன்ற பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்தது,

     



    இந்நிலையில், டெல்லி காவல்துறையில், பணியாற்றி வரும் 1,000 போலீசார் கொரோனாவால் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி கூடுதல் கமிஷனர் சின்மோய் பிஸ்வால், காவல்துறை செய்தித்தொடர்பாளர், போலீசார் என 1,000 பேர் ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரும் தற்போது வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

     



    நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு விரைவில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Police

    அடுத்த செய்தி