ஹோம் /நியூஸ் /இந்தியா /

நடுவானில் விமானத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் பீதி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ் ஜெட்!

நடுவானில் விமானத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் பீதி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ் ஜெட்!

ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்குள் கிளம்பிய புகை

ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்குள் கிளம்பிய புகை

ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் வரிசையாக 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அந்நிறுவனத்திற்கு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  நடு வானில் பறந்துகொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்குள் புகை கிளம்பி அதில் இருந்த பயணிகள் பீதிக்கு ஆளான பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து கோவா செல்லும் Q400 VT-SQB ஸ்பைஸ் ஜெட் விமானம் 86 பயணிகளுடன் கோவாவுக்கு புறப்பட்டது. இந்த விமானம் டேக் ஆப் ஆகி வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கேபினில் இருந்து புகை கிளம்பியது.

  இதனால் பயணிகளும், விமானக் குழுவும் அதிர்ச்சி அடைந்த நிலையில், விமானத்தை அவசர அவசரமாக மீண்டும் ஹைதராபாத் நோக்கி திருப்பி விமானநிலையத்தில் தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதால், அந்த நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் சிறிது நேரத்திற்கு திசைதிருப்பப்பட்டன.

  இந்த பரபரப்பு நிகழ்வுக்கு மத்தியில் ஸ்பைஸ் ஜெட் விமான குழு குறித்து பயணிகள் முக்கிய புகாரை முன்வைத்துள்ளனர். விமானத்தில் புகை கிளம்பியதை பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தபோது அதை விமான குழுவினர் தடுத்ததாகவும், சிலரின் செல்போனை பிடுங்கி அந்த வீடியோக்களை டெலீட் செய்ததாகவும் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

  ஒரு சில பயணிகள் மட்டும் விமான குழுவினரிடம் வாக்குவாதம் செய்து நடந்ததை படம் பிடித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காணொலிகள் தற்போது வைரலாகி வருகிறது.

  இதையும் படிங்க: டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை.. முன்னாள் காதலன் டார்ச்சர்? - சிக்கிய கடிதத்தால் பரபரப்பு

  சமீப காலமாகவே பயணத்தின் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இது போன்ற கோளாறுகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தாண்டில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் வரிசையாக 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அந்நிறுவனத்திற்கு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் கோளாறுகள் தொடர்வதால் இதை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Flight, Flight travel, SpiceJet, Viral Video