ஹோம் /நியூஸ் /இந்தியா /

India vs pakistan: டி20 உலக கோப்பை... இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது : பாபா ராம்தேவ்!

India vs pakistan: டி20 உலக கோப்பை... இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது : பாபா ராம்தேவ்!

பாப ராம்தேவ்

பாப ராம்தேவ்

எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகின்றன இந்த வேளையில், இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இன்று மாலை 7.30 மணிக்கு துபாயில்  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.  நாக்பூர் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகின்றன இந்த வேளையில், இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தார்.

கருப்பு பணத்தை மீட்பதன் மூலம் எரிபொருள் விலை குறையும் என அவர் முன்பு தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை தேச நலனுக்காகவே செய்து வருகிறது. பல்வேறு வகையான நிதிச்சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இதனால்தான் அரசால், வரியைக் குறைக்க முடியவில்லை. எனினும், என்றாவது ஒருநாள் இந்த கனவு நிறைவேறும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் யாகம்!

First published:

Tags: Baba Ramdev, India vs Pakistan, T20 World Cup