• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - கருத்துகணிப்பு முடிவுகள்

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - கருத்துகணிப்பு முடிவுகள்

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்து கணிப்பின் படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 147 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

    பீகாரில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், கிராண்ட் அலையன்ஸ் என்ற பெயரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் நின்று தேர்தலை சந்திக்கின்றன.

    இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்து கணிப்பின் படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 147 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 77 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 66 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. கிராண்ட் அலையன்ஸ் எனப்படும் காங்கிரஸ் அணிக 87 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 60 இடங்களும், காங்கிரஸுக்கு 16 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: