Home /News /national /

அமித்ஷாவின் விருந்து! ஓபிஎஸ், இபிஎஸ், பிரமேலதா விஜயகாந்த், அன்புமணி பங்கேற்பு

அமித்ஷாவின் விருந்து! ஓபிஎஸ், இபிஎஸ், பிரமேலதா விஜயகாந்த், அன்புமணி பங்கேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள்

தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள்

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதலமைச்சர், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • News18
  • Last Updated :
    டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த விருந்தில் தமிழகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, பிரமேலதா விஜயகாந்த், அன்புமணி, ஜி.கே.வாசன், சுதீஷ், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    மக்களவைத் தேர்தலுக்காக ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதலமைச்சர், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்திலிருந்து அ.தி.மு.க சார்பில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், அன்புமணி, ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Amit Shah, BJP, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி