நாடாளுமன்றத் தேர்தல்: பீகாரில் முடிவானது தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

2019 நாடளுமன்ற தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதுடன், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஓரிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தற்போது சுமூகமாக முடிவடைந்துள்ளது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஒவ்வொரு கட்சிகளுக்குமான தொகுதி எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டது. பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதுடன், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஓரிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அமித்ஷா- ராம் விலாஸ் பாஸ்வான்


மேலும் ராம் விலாஸ் பாஸ்வான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அதற்கு மாறாக அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி... 222 பேர் உயிரிழப்பு 
Published by:Vaijayanthi S
First published: