நிர்மலா சீதாராமன் குறித்து பேச்சு - ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

news18
Updated: January 10, 2019, 2:24 PM IST
நிர்மலா சீதாராமன் குறித்து பேச்சு - ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
ராகுல் காந்தி
news18
Updated: January 10, 2019, 2:24 PM IST
நிர்மலா சீதாராமன் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. இந்தநிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, ‘56 இன்ச் நெஞ்சு கொண்ட காவலர் ஓடிச் சென்று பெண்ணிடம், சிதாராமன்ஜீ என்னைக் காப்பாற்றுங்கள். என்னால், என்னை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. 2.30 மணி நேரமாக, அந்தப் பெண்ணால் பிரதமரைப் பாதுகாக்க முடியவில்லை. ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய நேரடியான கேள்விகளை எழுப்பினேன். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

அதனையடுத்து, ஆக்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘நம்முடைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்கட்சிகளை பொய்களை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார். அதனால், அவர்கள் நிர்மலா சீதாராமனை அவமானப்படுத்தினர்’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், தேசிய மகளிர் ஆணையம், நிர்மலா சீதாரமன் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு விளக்கம் கேட்டுள்ளது. அதுகுறித்தஅ தேசிய மகளிர் ஆணைய நோட்டீஸில், ‘ராகுல் காந்தி பெண்களை மதிக்கவவேண்டியது அவசிம். அவருடைய பேச்சு குறித்து அவர் விளக்கமளிக்கவேண்டும. அவருடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Also see:
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...