முகப்பு /செய்தி /இந்தியா / Rashtrapatni Row : குடியரசுத் தலைவர் குறித்து அவதூறு.. காங்கிரஸ் தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Rashtrapatni Row : குடியரசுத் தலைவர் குறித்து அவதூறு.. காங்கிரஸ் தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

Rashtrapatni Row : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து இழிவான கருத்து கூறியதாக பூதாகரமாக மாறிய விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அன்மையில் பதவியேற்ற நிலையில், குடியரசுத் தலைவர் குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்து சர்ச்சை யாகி பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

நேற்று முன்தினம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ரஷ்டிரபத்னி என்ற வார்த்தை கூறி அழைத்துள்ளார். இது இந்தி மொழியில் வேறு விதமான அர்த்தத்தை தருகிறது என்ற நிலையில், உள்நோக்கத்துடனே அவர் இவ்வாறு பேசியுள்ளார் என பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டின் உச்சபட்ச பதவியில் இருக்கும் ஒருவரை இவ்வாறு இழிவுபடுத்தும் விதமாக பேசிய அவர் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியும் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு தடுப்பூசி.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

தனது கருத்து தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 11.30க்கு இந்த விசாரணை நடைபெறும் என ஆணையம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆதிர் ரஞ்சனின் கருத்து மிகவும் இழிவானது, பெண்களை அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளது எனக் கூறியுள்ள ஆணையம், இது தொடர்பாக சோனியா காந்திக்கும் தனியே கடிதம் எழுதியுள்ளது.

அதில் ஆதிர் ரஞ்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. நேற்றே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில், கூட்டத் தொடரின் இன்றைய நாளிலும் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Congress, President Droupadi Murmu, Sonia Gandhi