• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கடந்த ஆண்டு வணிகர்கள் அதிகளவில் தற்கொலை - NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த ஆண்டு வணிகர்கள் அதிகளவில் தற்கொலை - NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

Suicide

Suicide

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் வணிகர்களின் தற்கொலைகள் 29% அதிகரித்துள்ளது.

  • Share this:
2020ம் ஆண்டில் விவசாயிகளை விட வணிகர்களே அதிகளவில் தற்கொலைகள் செய்திருப்பது தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகத்தின் (NCRB) ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

என்.சி.ஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகமானது நாடு முழுவதும் நடைபெறும் குற்ற நிகழ்வுகளின் புள்ளி விவரங்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டுக்கான என்.சி.ஆர்.பி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் நாடு முழுவதும் நடைபெற்ற தற்கொலை சம்பவங்கள் கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை நிகழ்வுகள் குறித்த தரவுகள் நம்மை அதிர வைக்கும் வகையிலாக அமைந்துள்ளது.

பொதுவாகவே வணிகர்களை காட்டிலும் விவசாயிகள் தான் அதிகளவில் தற்கொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பேரிடர் மனித வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றை தடுக்க பொதுமுடக்கம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளை காட்டிலும் வணிகர்கள் கடந்த ஆண்டு அதிகளவில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Also read: நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு

என்.சி.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020ம் ஆண்டு 11,716 வணிகர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 10,677 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். வணிகர்கள் தற்கொலையை என்.சி.ஆர்.பி மூன்று பிரிவாக வகைப்படுத்தியுள்ளது. அதன்படி 11,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் தற்கொலையில் 4,356 பேர் வர்த்தகர்கள் (Traders) எனவும், 4,226 பேர் விற்பனையாளர்கள் (vendors) எனவும் இதர தொழில்களில் ஈடுபட்டவர்களை மூன்றாவது பிரிவாகவும் என்.சி.ஆர்.பி வகைப்படுத்தியிருக்கிறது.

Also read:  அபுதாபியில் இந்திய பிட்ச் பராமரிப்பாளர் திடீர் மரணம்.. உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் சோகம்..

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் வணிகர்களின் தற்கொலைகள் 29% அதிகரித்துள்ளது. 2019ல் 2,906 வர்த்தகர்கள் தற்கொலை செய்த நிலையில், 2020ல் 49.9 சதவிகிதம் (4,356) அதிகரித்துள்ளது.  இதேபோல நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையும் 2019ஐ காட்டிலும் 2020ல் 10% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 1,53,052 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: