விவசாயிகளைவிட வேலையில்லாமல் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை அதிகம்! மத்திய அரசு ஆய்வு

இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் (17,972) முதல் இடத்திலும், தமிழகம் ( 13,896 ) இரண்டாவது இடத்திலும், மேற்குவங்கம்(13,255 ) மூன்றாவது இடத்திலும், மத்திய பிரதேசம் ( 11,775 ) , கர்நாடக மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

விவசாயிகளைவிட வேலையில்லாமல் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை அதிகம்! மத்திய அரசு ஆய்வு
job
  • Share this:
கடந்த 2018-ம் ஆண்டில் வேலை இல்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர், வேலை கிடைக்காமல் 12 ,936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எல்லா காரணிகளுக்காகவும் 2018-ம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் 17,972 பேரும், தமிழகத்தில் 13,896 பேர் என மொத்தம் ஒரே ஆண்டில் சுமார் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் (17,972) முதல் இடத்திலும், தமிழகம்( 13,896 ) இரண்டாவது இடத்திலும்,
மேற்குவங்கம் (13,255 ) மூன்றாவது இடத்திலும், மத்திய பிரதேசம் (11,775 ) கர்நாடக மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Also see:

 
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading