• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஷாகீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கைவேண்டும்! கடிதம் எழுதிய தேசிய குழந்தைகள் ஆணையம்

ஷாகீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கைவேண்டும்! கடிதம் எழுதிய தேசிய குழந்தைகள் ஆணையம்

ஷாகீன் பாக் போராட்டம்

ஷாகீன் பாக் போராட்டம்

கொரோனா பாதிப்பு உள்ள இந்த நெருக்கடியான காலத்தில் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் பங்கேற்கின்றன.

  • Share this:
    டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாவட்ட நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியின் ஷாகீன் பாக் கடந்த மூன்று மாத காலமாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றுவருகின்றனர். அவர்கள், குழந்தைகள், குடும்பத்தினருடன் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டுவருகின்றனர்.

    இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனையடுத்து, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, திரையரங்குகள், கேளிக்கைவிடுதிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியிலும், குடும்ப விழாக்கள் தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஷாகீன் பாக் பகுதியில் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துவருகிறது.



    இந்தநிலையில், தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தென்கிழக்கு டெல்லி மாவட்ட நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு உள்ள இந்த நெருக்கடியான காலத்தில் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதொடர்பான அறிக்கையை மூன்று நாள்களுக்குள் சமர்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: