NCP SPOKESPERSON CLYDE CRASTO WROTE A LETTER TO RAJ THACKERAY ON CORONA GUIDELINES VIOLATIONS SRS
முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களில் அலைந்த ராஜ் தாக்கரே - முன்மாதிரியாக இருங்கள் என்று கடிதம் எழுதிய தேசியவாத காங்கிரஸ்
ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே சமீபத்தில் பொது இடங்களுக்கு வந்தபோது முகக்கவசம் அணியவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ``முகக்கவசம் அணியவில்லை” என்று பதிலளித்துள்ளார். சமீபத்தில் நாசிக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரது கட்சி பொறுப்பாளர் ஒருவரிடம் முகக்கவசத்தை அகற்ற அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராஜ் தாக்கரே மீது எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல மாநிலங்களிலும் குறைந்து வந்தாலும் மகாராஷ்டிராவில் வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 11,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பொது இடங்களில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் என்சிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ ராஜ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி கொரோனா பரவல் தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளைட் க்ராஸ்டோ எழுதியுள்ள கடிதத்தில், ’கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்று முகக்கவசம் அணிவது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம்மில் பலரும் தொடர்ந்து அதனை பின்பற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் எடுத்துரைக்க எங்களது அரசாங்கம் தொடர்ந்து வெற்றிகரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், உயிருக்கு ஆபத்தான இந்த வைரஸூடன் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ் தாக்கரே சமீபத்தில் பொது இடங்களுக்கு வந்தபோது முகக்கவசம் அணியவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ’முகக்கவசம் அணியவில்லை’ என்று பதிலளித்துள்ளார். சமீபத்தில் நாசிக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரது கட்சி பொறுப்பாளர் ஒருவரிடம் முகக்கவசத்தை அகற்ற அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராஜ் தாக்கரே மீது ஆளும்கட்சிகள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றன.
கடிதத்தில் கிளைட் க்ராஸ்டோ தொடர்ந்து, ’உங்களை எண்ணற்ற நபர்கள் பின் தொடர்கிறார்கள். நீங்கள் பலருக்கு ஒரு வழிகாட்டி, நண்பர், உத்வேகம் அளிக்கக்கூடியவர். கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் வெளியிடும் ஒரு அறிக்கை பலரையும் சிந்தித்து பின்பற்ற வைக்கும். எனவே, முகக்கவசத்தை அணிந்து உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமல்லாது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்மாதிரியாக இருங்கள். கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்கான எங்களது தீர்மானத்தை வலுப்படுத்த உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.