பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார்!

பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
  • News18
  • Last Updated: December 3, 2019, 11:37 AM IST
  • Share this:
மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்து ஒன்றிணைந்து செயல்பட வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜகவும், தேசியவாத காங்கிரசும் ஒன்றாக இணைந்து செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகவும், ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என அவரிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

பாஜகவை ஆதரித்தால் தன்னை குடியரசுத் தலைவராக்க மோடி முன்வந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை எனக் குறிப்பிட்ட சரத் பவார், மத்திய அமைச்சரவையில் தனது மகள் சுப்ரியா சுலேவை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது எனக் கூறினார். சகோதரர் மகனான அஜித் பவாரின் நடவடிக்கைக்கு தனது ஆதரவு இல்லை என்றும் சரத் பவார் தெரிவித்தார்.


Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading