போதைப்பொருட்கள் வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆஜர்

போதைப்பொருட்கள் வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆஜர்
தீபிகா படுகோன்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 11:18 PM IST
  • Share this:
போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சிக்கிய அவரது காதலி ரியா போதைப்பொருள் வழக்கில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ரியாவின் வாக்குமூலத்தில் போதைப்பொருள் பயன்படுத்துதல், வினியோகித்தல் தொடர்பாக பாலிவுட் நடிகைகள் சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர், தீபிகா படுகோன் பெயர்கள் அடிப்பட்டன.


தீபிகா மேலாளர் கரிஷ்மா உடன் நடந்த வாட்ஸ்ஆப் உரையாடலை மையப்படுத்தி தீபிகாவுக்கு தொடர்பு இருப்பதை போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக, நடிகை தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் வந்து ஆஜராகும்படி கடந்த 23ம் தேதி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

வெள்ளியன்று ஆஜரான நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மும்பை கொலாபாவில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகினார்.தீபிகாவுடன் சேர்த்து அவரது மேலாளர் கரிஷ்மாவிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது, தனது மேலாளரிடம் போதைப்பொருள் குறித்து வாட்ஸ் அப் உரையாடலை தீபிகா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஐந்து மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீபிகாவின் பதில்கள் அதிகாரிகளுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோல், நடிகை ஷ்ரத்தா கபூரிடமும் நான்கு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.



இதனிடையே பிரபலங்களை அழைத்து விசாரிப்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்று சுஷாந்தின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading