• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல - அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல - அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

Sameer wankhede

Sameer wankhede

பாலிவுட் நட்சத்திரத்தின் மகனை கைது செய்ததால் சமீர் வான்கடே சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

  • Share this:
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கான், மும்பை கடல்பரப்பில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது போதைப் பொருட்களை கடத்திச் சென்று பயன்படுத்தியதாக, சமீர் வான்கடே தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு முகமையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூன்று வாரங்களுக்கு பின்னர் தற்போது ஆர்யன் கானுக்கு பெயில் கிடைத்துள்ளது.

இதனிடையே பாலிவுட் நட்சத்திரத்தின் மகனை கைது செய்ததால் சமீர் வான்கடே சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களை விடுவிக்க லஞ்சமாக பணம் கேட்டு சமீர் வான்கடே மிரட்டியதாக புகார்கள் சென்றதையடுத்து சமீர் வான்கடேவை கைது செய்யும் அளவுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தன்னை கைது செய்யக்கூடாது எனவும், மகாராஷ்டிர அரசு தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் சமீர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக், சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் அவர் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர் என பரபரப்பு குற்றச்சாட்டை ஏற்கனவே வைத்திருக்கிறார்.

Also read: மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை அசைக்க முடியாது – பிரசாந்த் கிஷோர் ஆருடம்

ஆனால் இதனை மறுத்த சமீர் வான்கடே, தனது தந்தை தினியான்தேவ் கச்ருஜி வான்கடே இந்து எனவும், தனது தாயார் சகீதா இஸ்லாமியர் எனவும், தனது தந்தை கலால் துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து 2007ல் ஓய்வுபெற்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

மாமனார் அம்பலப்படுத்திய தகவல்:

இதற்கிடையே, சமீர் வான்கடேவின் முதல் மனைவியான ஷபானாவின் தந்தை டாக்டர். சஹீத் குரேஷி இன்று செய்தியாளர்களிடையே பேசும்போது, சமீர் வான்கடேவின் குடும்பத்தினர் முஸ்லிம்கள், அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இது நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Also read: மோடியின் பலம் பற்றி ராகுல் காந்தி புரிந்துகொள்ளவில்லை – பிரசாந்த் கிஷோர்

“எங்களுக்கு தெரிந்தவரையில் வான்கடேவின் குடும்பத்தினர் இஸ்லாத்தை பின்பற்றி வருபவர்கள், சமீரின் தந்தை தினியான்தேவ், தாவூத் வான்கடே என்றே அறியப்படுகிறார். சமீரை எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததற்கு காரணமே, அவருடைய தாயார் சஹீதாவுடன் நாங்கள் நெருங்கிய நட்பில் இருந்ததால் தான்.” என்றார்.

மசூதிக்கு செல்வார்:

வான்கடே ஒரு இந்து என கூறுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சமீர் அவ்வப்போது மசூதிகளுக்கும் சென்று வருவார். சமீர் ஒரு இந்து என அறிவித்த பின்னர் பலரும் என்னிடம் எதற்காக எனது பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தீர்கள் என கேட்கிறார்கள். எனவே இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமீரின் குடும்பத்தினர் இஸ்லாமைச் சேர்ந்தவர்கள். சமீருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. அப்போது என்ன சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார் என கேட்கவில்லை. அப்படி செய்வது அழகல்ல” என தெரிவித்தார்.

Also read:  ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா!

சமீர் வான்கடே கடந்த 2006ம் ஆண்டு ஷாபானாவை திருமணம் செய்து பின்னர் 2016ல் விவாகரத்து பெற்றார். 2017ல் நடிகை கிராந்தி ரெட்கரை திருமணம் செய்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: